( வி.ரி.சகாதேவராஜா)
நிந்தவூரில் தனது பூர்வீக காணியில் அழகிய முருகன் பொற் கோவிலை நிருமாணித்து கும்பாபிஷேகம் கண்ட அவுஸ்திரேலியா வாழ் நிந்தவூரைச் சேர்ந்த இராமலிங்கம் ரவீந்திரதேவன் தம்பதியருக்கு ஆலய சந்நிதானத்தில் உயர் கௌரவம் அளிக்கப்பட்டது.
இவ் வரலாற்று பணியை செய்த ரவீந்திரதேவன் தம்பதியருக்கு, தம்பிலுவில் திருநாவுக்கரசர் நாயனார் குருகுலம் மற்றும் நிந்தவூர் தமிழ் சமூகம் இணைந்து மகத்தான கௌரவத்தை வழங்கியது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் இக்கௌரவம், விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அவர்களுக்கு “வரலாற்று மீட்பு திருப்பணிச் சாகரர்” என்ற பட்டம் வழங்கப்பட்டு, தலைக்கிரீடம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி இக் கௌரவிப்பு இடம்பெற்றது.
தம்பிலுவில் திருநாவுக்கரசர் நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரெத்தினம், செயலாளர் பா.சந்திரேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு கௌரவத்தை வழங்கினர்.


