இலங்கையில் தங்க நிலவரம்!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (10) பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

​உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதிய முதலீடுகளே இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

​அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,761.84 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு அவுண்ஸ் 76.02 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10) நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.