2027 ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2027 ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று (09) இடம் பெற்றது .

2027 ஆண்டுக்கான பாதீட்டில் மாவட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கும் செயற்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது இத்திட்டங்களுக்கான செலவினம் தொடர்பாகவும் மாவட்டத்தில் முக்கியமாக செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டன.

நீர்பாசனம் , திண்ம கழிவு முகாமைத்துவம், யானை வேலி அமைத்தல், புதிய வீதிகள், பாலங்களை நிர்மாணம் செய்தல், நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல், கழிவு நீர் முகாமைத்துவம் போன்ற பல செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.