திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கேந்திரமூர்த்தி நியமனம்!

( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக, கல்முனை ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி, நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் .

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர், பிரதேச செயலகத்தின்உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.