நாட்டில் இன்று (07) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலை வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளில் அது நேர் உச்சியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், தெஹிவளை, மஹரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹலியகொட, மஸ்கெலியா, சியம்பலாண்துவ மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இன்று (07) நண்பகல் 12:13க்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


