கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை (05) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்படும் காலப்பகுதி 8 முதல் 12 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியான ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதி வரை எந்தவொரு பகுதியிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


