பாலையடி வட்டையில் அமைந்துள்ள இராணுவ முகாம் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ முகாமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தது.குறித்த முகாமானது கடந்த காலங்களில் குறித்த பிராந்தியத்தின் சந்தையாக மூவின மக்களும் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மத்திய நிலையமாக காணப்பட்டது.
குறித்த ராணுவ முகாம் அமைந்துள்ள வளாகத்தில் தபால் நிலைய கட்டிடமும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த ராணுவ முகாம் அமைந்திருந்த காரணத்தினால் சந்தையானது நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுடைய முயற்சியின் பேரில் குறித்த முகாம் முழுமையாக அகற்றப்படுகின்ற செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது குறித்த முகாமினை அகற்றும் பொருட்டு போரதீவுப் பற்று பிரதேசசவையின் இரண்டாவது சபை அமர்வின் போது முகாமை அகற்றுவது தொடர்பாக பிரேரனை முன்வைக்கப்பட்டு குறித்த பிரரேரனை சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சி மற்றும் ராணுவம் போன்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறித்த முகாமினை அகற்றுவதற்கு இரா.சாணக்கியன் அவர்கள் ஆற்றிய பணியினை கௌரவிக்கும் வகையில் பிரதேசத்தில் ஒன்று கூடிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது மேலும் குறித்த நிகழ்வில் போரததீவுப்பற்று தவிசாளர் மதிமேனன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் வினோராஜ் உப தவிசாளர் வசீகரன் மற்றும் கயசீலன் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளை கொண்டாடிய தவிசாளர் வினோராஜ் அவர்களின் பணியினையும் அவர் தொல்பொருள் விடயங்களில் குறித்த பிரதேசத்தில் ஆற்றிய பணிக்காகவும் அவரை கௌரவித்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியமையும் அவதானிக்கதக்கதாக காணப்பட்டது.



