கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் வானிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட தகவல்களை வெளியிட்டுள்ளது.
இன்று (01) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய வெப்பநிலையாக 37°C குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஆகக்குறைந்த வெப்பநிலையாக 8.1°C நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் களுபஹன தோப்பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 39 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி நிரிஅல்ல பகுதியில் 30 மில்லிமீற்றர் மழைவிழச்சியும் ,குகுலேகங்க பகுதியில் 26மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் , கட்டுநாயக்க பகுதியில் 17.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


