( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினது 128வது பிறந்த தின நிகழ்வு நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிரு.ஜெயசிறில் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைச் செயலாளர் க.செல்வபிரகாஷ் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த.மோகனதாஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தந்தை செல்வா திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி வழிபட்டனர்.
தந்தை செல்வாவின் சேவைகள் பற்றிய சிறப்பு பேச்சுகளும் இடம்பெற்றன.


