மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தை தரவுகளின்படி, WTI Crude Oil (West Texas Intermediate) மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 99.64 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent Crude Oil ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 112.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேநேரத்தில், Natural Gas விலையும் அதிகரித்து, 3.025 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சம் இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பு, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்தால், எதிர்வரும் நாட்களில் எரிசக்தி விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


