கொக்கட்டிச்சோலை பாழ்ங்கிணற்றில் படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரல்

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பாழ்ங்கிணறு சம்பவத்தில் , படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு கடந்த 28.02.2026 அன்று நெல்லிக்காட்டு கிணற்றில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

மட்டக்களப்பு திக்கோடை வம்மியடியூற்று 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய திருமதி நளாயினி ரவி என்பவரே படுகொலையுண்டவராவார்.

அவரையிழந்து நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது.

மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், அவரது கணவர் செல்லத்துரை ரவி (வயது 48) கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறார் .

கடந்த சுமார் 40 ஆண்டுகளாக வறுமையில் வாழ்ந்து வந்த இவர், தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இத்தம்பதியருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

அவரது மகன் ரவி முகுந்தனுடன் 074 1577381 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விடயத்தை அறியலாம்.

எனவே, கருணையுள்ள பொதுமக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கின் மூலம் தங்களது நன்கொடைகளை வழங்கலாம்.
வங்கி விவரங்கள்:
A/C Name: Miss. Ravi Denusiya
A/C No: 92549457
Bank: Bank of Ceylon
Branch: Palugamam
Swift Code: BCEYLKLXXXX
மேலும் தகவல்களுக்கு:
WhatsApp: +94 74 157 7381
இந்த நெருக்கடியான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய பொதுமக்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது