சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,493.79 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 69.77 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


