கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பிரதேச செயலகத்தில் அண்மையில் (24) இடம்பெற்றது.

திணைக்களங்களுக்கு காணிகளை கையளித்தல், பராதீனப்படுத்தல் மற்றும் குத்தகையில் காணிகளை வழங்குதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன் போது இவற்றுடன் தொடர்புபட்ட திணைக்கள பிரதிநிதிகள், கிராம சேவை உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர்கள், செயலகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.