மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் இன்றைய தினம் 24.03.2026 மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது சிறு குளங்கள் அபிவிருத்தி, மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிறு குளங்கள் மீளப்புனரமைப்பு,
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறை, உரம், எரிபொருள் வழங்கும் நடைமுறை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டால் பல நூற்றுக்கான ஏக்கர் நிலங்களை பயிர்ச்செய்கைக்கு இணைத்துக்கொள்ளலாம் எனவும் பிரதி ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நிவர்த்தி செய்ய நாடாளுமன்ற மட்டத்திலும், அமைச்சு சார் மட்டத்திலும் உரிய அழுத்தங்களை வழங்கி, துரித கதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


