எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி, போதைப்பொருள் தடுப்பு, உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் முதலாம் காலாண்டுக்கான கூட்டம் இன்று
(24) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப்பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்.எஸ்.ரவிசந்ரா மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர், களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர், காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி, மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கோட்ட ஆசிரிய ஆலோசகர், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு இணைப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திலே பிரதேசத்தின் சிறுவர்களின் கல்வி, சுகாதாரமும் போசனையும், பாதுகாப்பு பராமரிப்பு, போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்படுகின்றமை, உளவியல் மற்றும் சமூக தேவைகள், பெண்கள் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் பல ஆக்கபூர்வமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.


