திருப்பழுகாமம் அருள்மிகு கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவ ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா 

 

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று நண்பகள் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்திபூர்வமாக இடம் பெற்றது

 

கிழக்கு மாகாணத்தில் முதலாவது வருடாந்த உற்சவம் இடம்பெறும் சிவன் ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் 10 நாட்கள் திருவிழா இடம் பெற உள்ளது

 

கண்டி சிவ முத்து மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு. ஜநேந்திர ராஜ குருக்கள் தலைமையில் வருந்தா அந்த உற்சவ கிரிகைகள் இடம்பெற உள்ளது.

29.03.2026 அன்று மாம்பழத் திருவிழாவும் 30.03 அன்று திருவேட்டை திருவிழாவும் 31.03 அன்று முத்துச் சப்பர திருவிழாவும் இடம் பெற உள்ளதுடன் 01.04.2026 அன்று இறுதி 10 நாள் திருவிழாவான தீதோற்றவ திருவிழா இடம்பெற உள்ளது அன்று மாலை கொடி இறக்க திருவிழாவும் இடம் பெற்று வைரவர் பூசையுடன் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவடைய உள்ளது

 

இவ்வாலயத்தின் திருவிழா காலங்களில் தினசரி பஜனை நிகழ்வுகள் சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.