( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய சங்காபிசேகத்தையொட்டி ஆலய வளாகத்தில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வருடாந்த சங்காபிஷேகம் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில், ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன குருக்கள் தலைமையில் நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அதனையொட்டி ஆலயத் தலைவர் கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில், காரைதீவு சுவாட் அமைப்பின் பெண் உறுப்பினர்கள் புல்பற்றைகளை துப்பரவுசெய்து பாத்திரங்களை விளக்கி தீந்தை அடித்து சிரமதானத்தில் ஈடுபட்டனர்.


