எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வைத்தியசாலை, குடிநீர்வழங்கள், விவசாயம், மீன்பிடி மற்றும் பல தேவைகளுக்க முன் உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் சராசரி எரிபொருள் கொள்வனவை விட அதிகமான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையினால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மாட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


