சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்ட அங்குரார்ப்பணம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்ட அங்குரார்ப்பண வைபவம் 16.03.2026 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை கும்புறுமூலை 203B மாணிக்கபுர கிராமத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணிக்கபுர கிராமத்தில் முன்னெடுக்க வேண்டிய 3 திட்டங்கள் த கையளிக்கப்பட்டன. பிரதேச செயலாளர் மற்றும் வருகை தந்த பிரதிநிதிகளால் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசத்தினை கட்டியெழுபுகின்ற வளமான கிராமம் எனும் கருப்பொருளுக்கமைய,கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக மாதிரி கிராம ஆரம்ப விழாவினை தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு மாணிக்க புர கிராமத்தில் கும்புறுமூலை கிராம சேவக பிரிவில் உள்ள மக்களினால் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதன் பின் உற்பத்தித் திறன் மாதிரி கிராமத்திற்கான கைநூல் 50 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டதுடன், மரநடுகையும் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரின் பிரதிநிதி, கிளீன் ஸ்ரீலங்கா திட்ட பிரதிநிதி, கௌரவ பிரதேச சபை உறுப்பினர், பிரஜா சக்தி தலைவி, வெம்பு பாடசாலை அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், மாணிக்கபுர மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.