“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்”; வேலைத் திட்டத்திற்காக கிரான் குளம் மத்தி கிராமம் தெரிவு செய்யப்பட்டு இன்று (16) காலை 10 மணிக்கு திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அ. சுதர்சன் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி, பிரதேச சபை உறுப்பினர், மண்முனைப்பற்று கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்திற்கான பிரதிநிதி, பிரஜா சக்தி தலைவர், பிரதேச பொலீஸ் உத்தியோதர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக உற்பத்தித்திறன் பிரதிநிதிகள் மற்றும் இவ்வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள மாதிரி கிராம குழு தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச கிராம மக்களினால் மேற்படி கிராமத்திற்காக முன்வைக்கப்பட்ட சமுதாய அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக உதவிப் பிரதேச செயலாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது ,

திட்ட முன்மொழிவு விசேட அறிக்கை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக உற்பத்தி திறன் தலைவர் ஆகியோரினால் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் பயனாளிகளுக்காக வழங்கப்பட்ட சமூக உற்பத்தித் திறன் பயிற்சிக் கையேடு அதிதிகளினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.