மண்முனைப்பற்று பிரதேச கலாச்சார பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப்பற்று பிரதேச கலாச்சாரப் பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாச்சாரப் பேரவை, அதிகார சபை உபதலைவரும் உதவிப் பிரதேச செயலாளருமாகிய கி. இளங்குமுதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன், கலாச்சார உத்தியோகத்தர், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பேரவை மற்றும் அதிகாரசபை செயலாளர்கள், உபசெயலாளர்கள், பொருளாளர்கள், ஆலோசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கலைஞர்கள் என 100 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தரின் வரவேற்புரை, உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கலாச்சாரப் பேரவை, அதிகாரசபை பற்றிய தெளிவூட்டல்களும் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான விளக்கமும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டது.

உதவிப் பிரதேச செயலாளர் இவ்வமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

பேரவை, அதிகாரசபை நிருவாக தெரிவுகள் இடம்பெற்றது.