அன்னை பூபதியின் நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிப்பு…

எதிர்வரும் மார்ச் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள அன்னை பூபதி அம்மாவின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஆரம்ப நாள் அனுஸ்டிப்பு தினைத்தை முன்னிட்டு அன்னை பூபதியின் நினைவிடம் மற்றும் அதனை அண்டிய சுற்றயல் துப்பரவு செய்யும் முகமான சிரமதானம் இன்றைய தினம் தாயக செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய படை வெளியேறவும், தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி மட்டக்களப்பில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியம்மாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்னை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த மார்ச் 19ம் திகதிக அன்னையின் போராட்ட வாழ்வியலை நினைவுகூரும் முகமாக அனுஸ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச்சிரமதானப் பணிகள் மும்னெடுக்கப்பட்டன.

தாயகச் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்தின் ஏற்பாட்டில் குறித்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொடர்ந்து துப்பரவுப் பணிகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.