கார்மேல் பத்திமா கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர்

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் பாடசாலையின் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், சிரேஷ்ட புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் (11) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட உதவி அரசுக் கணக்காய்வாளர் நாயகம் திரு. பி. பட்குனன். அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி கே.ஏ.ஐ. லசந்த கழுவாராச்சி அவர்கள் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக திரு. கே. திருநாகரன் மற்றும் திரு. ஏ. கிருஷாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், புதிய மாணவர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக சின்னங்கள் சூட்டப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.