நாவிதன்வெளியில் மாற்றுத் திறனாளிக்கு கோழிக்கூடும் கோழிக்குஞ்சுகளும்

( வி.ரி.சகாதேவராஜா)

நாவிதன்வெளியில் மாற்றுத் திறனாளிக்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.பவனரூபன் கோழிக்கூட்டையும் கோழிக்குஞ்சுகளையும் வழங்கி வைத்தார்.

கடந்த 2025ம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு உதவி வழங்குவதற்கென தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தி நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.புவனரூபன் இதனை நேற்று வழங்கி வைத்தார்.

அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக கோழிக்கூடுகளும் கோழிக்குஞ்சுகளும் நாவிதன்வெளி பிரதேசசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு விசேடதேவையுடைய குடியிருப்புமுனை அன்னமலை02 வீரகுமாரன் சோமசுந்தரம் என்பவருக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் கோழிவளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன.