Onegov System தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்டச் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட OneGov system தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து ஊழியர்கள் கலந்துகொண்டு இந்த முறையினால் பொதுமக்களின் சேவைகளைத் திறம்பட செயற்படுத்துவது தொடர்பான தெளிவூட்டப்பட்டது.

அதன் இரண்டாம் கட்டமாக OneGov முறையை அமுல்படுத்தும் செயல்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதற்கான தெளிவூட்டல் கருத்தரங்காக குறித்த நிகழ்வு அமைந்திருந்தது.