சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!

ஊடகவியலாளர் சண்.தவராசா அவர்களின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூல் அறிமுக விழா ஞாயிறு பிற்பகல் சுவிட்சர்லாந்து பேரண் நகரில் உள்ள சைவநெறிக் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
கலைவளரி வாவி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கவிஞர் உரும்பையூர் து.திலக் நூல் அறிமுக உரையாற்றினார். ஆய்வுரையை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சு.ரவி நிகழ்த்தினார்.
முதற்பிரதியை ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் பெற்றுக்கொண்டார்.
ஏற்புரையை நூலாசிரியர் சண்.தவராசா நிகழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் சண். தவராசா தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் இடம் பெற்றது.
சிவருசி தர்மலிங்கம் சசிகுமார், அன்ரன் பொன்ராசா, லாவண்யா லக்ஸ்மன் கவிஞர் ஈழப்பிரியன் வரலாற்றை பதிவு செய்தல் என்ற தலைப்பில் உரையாற்றினர்.