கடுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை, வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


