சிரேஸ்ட ஊடகவியலாளர் அச்சுதனின் ” கோட்டை வாசலில் காலக்கண்ணாடி” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா..!

(ஹஸ்பர் ஏ.எச்)

சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய ” கோட்டைவாசலில் காலக்கண்ணாடி” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எமுதலாம் கவிதைச்சிற்றிதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம் பெறும்.

இவ் விழாவில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் சிறப்பு அதிதியாக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் முதல்வர் க. செல்வராஜா (சுப்ரா) வும், விசேட அதிதிகளாக வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் கி. லசஷ்மன் சிசில், கிளிவெட்டி பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தின் அதிபர் பு. ஜெயகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்தினை அ . கோகுலரமணன் வழங்க, வரவேற்புரையை ஊடகவியலாளர் பா. விபூசிதனும், ஆசியுரையை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களும், நூல் அறிமுக உரையை ஊடகவியலாளர் ச. திருச்செந்தூரனும், ஆய்வுரையை ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமாரும் வழங்க ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் அரசரெத்தினம் அச்சுதன் நிகழ்த்துவார்.
இந் நிகழ்வினை கலாபூசணம் க. யோகானந்தம் தொகுத்து வழங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.