துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்றைய தினம் திறந்து வைப்பு!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தவிசாளர் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவும் பிரதேச சபையின் தீர்;மானத்திற்கு ஏற்பவும் சபையின் எல்லைக்குட்பட்ட 12 வட்டாரங்களுக்கும் ஒவ்வொரு ஆங்கில மொழிமூல ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் துறைநீலாவணை வட்டாரத்தில் முதலாவது பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் தனது பல்வேறு அபிவிருத்தி திட்டத்தில் மிகவும் பிரதானமானது பிரதேசத்தின் கல்வியை உயர்த்துவதாகும் இந்த ஆங்கில மொழிமூல ஆரம்ப பாடசாலையானது ஏனைய 11 வட்டாரங்களுக்கு மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இப்பாடசாலையினை ஆரம்பிப்பதற்கு எனக்கு பல்வேறு சவால்கள் காணப்பட்டது அதனை தாண்டி நான் இதை திறந்து வைத்ததில் பெருமையடைகின்றேன். இந்த பாடசாலையானது இலங்கையின் முதலாவது பாடாலை என்பதில் நான் மகிழ்வடைகின்றேன். 30 வருட போராட்ட காலத்தில் நாம் அனைத்ததையும் இழந்திருந்தோம் அவை அனைத்ததையும் கட்டி ஏழுப்பும் ஆயுதமாக நான் கல்வியை காணுகின்றேன் அதனால்தான் இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றேன்.. மேலும் எதிர்காலத்தில் பாடசாலைகளில் இலவசமாக மாலைநேர வகுப்புக்களை நடாத்த தீர்மானித்துள்ளேன் இதற்கும் அனைவரினதும் ஒத்தழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், வலயக் கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேணன் ஆகியோர் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.