(வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படகு சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.


