பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் வைக்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் வைக்கும் நிகழ்வானது பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்றது.

கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் நாட்டு வைபவம் கெவிளியாமடு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

கேமாஸ் நிறுவனத்தினரினால் மாவட்டத்தில் இரண்டாவது சிறுவர்நேய முன்பள்ளி பாலர் பாடசாலை நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் பட்டிப்பளை ,உதவி பிரதேச செயலாளர் ,மாவட்ட முன்பிள்ளைப்பரு்வ அபிவிருத்தி்இணைப்பாளர் ,பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்திய்யோகத்தர் ,மத குருமார் மற்றும் பாலர்பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொன்டனர்.