எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் “முழு நாடும் ஒன்றாக” “ரட்டம எகட்ட ” விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசமில் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.
தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டில் அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் விஷபோதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்.
இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் இதன் போது வழங்கப்பட்டன.
எமது நாட்டின் இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விட்டனை தொடர்பான தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான நபர்களுக்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பாக 1927 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.


