எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி பிருந்தன் நிருபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சந்திவெளி பொலிஸ் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டமானது சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எஸ்.சமன் குணசேகர தலைமையில் இன்று (05) இடம் இடம் பெற்றன.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயல் திட்டமானது மார்ச் மாதம் முதலாம் வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் பொது இடங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பொதுபோக்குவரத்து பஸ்களில் பொலிஸாரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் என்.சிவகணேஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


