( வி.ரி. சகாதேவராஜா)
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மி, தான் பிறந்த மாவடிப்பள்ளி கிராமத்தில் உள்ள சகல வீடுகளுக்கும் நோன்பு பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுடீனின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழம், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகிக்கும் நிகழ்வு கடந்த 2026.03.03ம் திகதி செவ்வாய் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு மாவடிப்பள்ளி கிராமத்தின் பெரும்பாலான அனைத்து குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஹில்மி தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று அவற்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


