எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக : மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.
மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவகங்களில் கல்வி கற்கும் சமுர்த்தி மற்றும் அஸ்வசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான NVQ III, IV தரத்திலான
சான்றிதழ் கற்கை நெறிகள்
நடாத்தப்பட்டு வருகின்றது.
2025 ஆண்டு NVQ lII, IV தரத்திலான கனரக வாகன இயக்குநர் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த சமுர்த்தி மற்றும் அஸ்வசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான சான்றிதழ்களை அரசாங்க அதிபர் இதன் போது வழங்கி வைத்தார்.
மேலும் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கற்கை நெறிகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.
இவ் பயிற்சி நெறிகளை சிறந்த நிபுணர்களினால் வழங்கப்படுகின்றமையினால் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற நபர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட சிரேஸ்ட சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம் அலி. அக்பர், VTA, NAITA , ரியல் லுக் அக்கடமி பிரைவட் லிமிட்டற், விவேகானந்தா கொலிஜ் மற்றும் பல தனியார் கற்கை நிறுவன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.


