நேற்று கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம் நடைபெற்றது

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் மகா யாகம் நடைபெற்றது.

சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வியுடன் தொடங்கி, ஒரு லட்சம் பஞ்சாட்சர ஜெபத்துடன் லிங்கேஸ்வரருக்கு பிரமாண்டமான அபிஷேகம் இடம்பெற்றது.

சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் ,நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் ஆலோசனையின்படி இவ் விசேட யாகம் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.