கிண்ணியா தனியார் கல்வி நிலையங்களில் நோன்பு 19க்கு பிறகு வகுப்புக்கள் நடாத்த தடை!

ஹஸ்பர் ஏ.எச்_

புனிதமான ரமழான் நோன்பு காலத்தில் நோன்பு 19க்கு பிறகு தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு பகலிலும்,இரவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (28) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் தற்போது தனியார் வகுப்புக்கள் மாலை 5.30 க்கு முன்னர் முடிவுறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்ட நிலையிலும் கூட இரவு நேரங்களில் நடாத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகிறது. எனவே றமழான் காலத்தில் இறுதிப் பத்தில் இஹ்திகாப் இருந்து இபாதத்துக்களில் ஈடுபட வேண்டிய காலம் அதனால் நோன்பு 19க்கு பின்னர் முற்று முழுதாக தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு தடை விதிக்கிறோம் இதனை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.