நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபாடு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் நிலவும் காற்று மாசுபாடுகள் இந்த நிலைக்கு பிரதான காரணம் என்று தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் அதிகளவில் உயர்ந்துள்ளது.

குறிப்பாக கோட்டே பகுதியில் 127 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் 76 அலகுகளாகவும், தம்புள்ளையில் 71 அலகுகளாகவும், காலியில் 69 அலகுகளாகவும் காற்று மாசு அளவுகள் பதிவாகியுள்ளன.

பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று காற்றின் தரம் குறைந்துள்ளதாகவும் பிரேமசிறி மேலும் குறிப்பிட்டார்.

சாதாரண காற்றின் தர சுட்டெண் அளவு 50க்கு கீழே இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.