பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவிற்க்கான நேர்முகத்தேர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த வெற்றிகரமான பெண்கள் அங்கீகாரத் திட்டம் 2026 ஆண்டிற்கான கௌரவிப்பிற்கான பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவிற்க்கான நேர்முகத்தேர்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தின
தேசிய கொண்டாட்டமானது எதிர்வரும் 2026.03.08 கொண்டாடப்படவுள்ள நிலையில் மகளிர் தின நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை மகளிர்
பணியகத்தின் கீழ் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் சிறந்த பெண் தொழில்முனைவோர் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அந்தவகையில் மாவட்ட மட்டத்தில்
காணப்படும் பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே.அருள்ராஜ் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நேர்முக தெரிவிற்கான மதிப்பீட்டு உத்தியோகத்தர்களாக மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.