உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது.
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


