விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபினுடைய பாரதூரமான விடயங்களை கருத்தில் கொண்டு இச்சட்டத்தினை திருத்தம் செய்வது அல்லது தடை செய்வது தொடர்பாக செயலமர்வு ஒன்று சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான அம்பிகா சற்குணநாதன் அவர்களினால் கொழும்பு சர்வோதயம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அதாவது 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் ஆனது 1982ல் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டதன் பின்பு குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பாரிய விளைவுகளையும் பல இன்னல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறான சட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் என்கின்ற சட்டத்தை உருவாக்கி அதனுடைய சாதக பாதக தன்மைகளை மக்களிடமிருந்தும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் மற்றும் அமைப்புகளிடம் இரந்தும் இவை தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே குறித்த சட்டமானது பயங்கரவாத தடைச் சட்டத்தினை விட மேலும் பாரதூரமான சட்ட அம்சங்களைக் கொண்டும் முப்படைக்கும் முழுமையான அதிகாரத்தை வழங்குவதோடு மட்டுமில்லாது ஜனாதிபதிக்கும் மேலும் பலமான அதிகாரங்கள் கிடைக்கத் தக்க வகையிலும், நீதிபதிகளுக்கான சுயாதீனத் தன்மை அல்லது நீதிபதிகளுக்கு கூட சட்ட ரீதியான முழுமையான செயல்பாடுகளை மேற்கொள்ளா முடியாத அளவுக்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.
இது மனித உரிமைகளையும் மனிதனுடைய கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்களின் செயற்பாடுகளுக்கும் மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கும் தடை விதிக்க தக்க வகையில் பல்வேறு வகையான சரத்துக்களும் திருத்தங்களும் புதிய முன்வைக்கப்பட்டுள்ளன எனவே குறித்த சட்டத்தினை தடை செய்வது தொடர்பாக மக்களுக்கு முறையான ஒரு தெளிவுட்டல் தேவை என்ற அடிப்படையிலும் PTAயினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாகன பரிந்துரைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் இந்த செயல் அமர்வு நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வில் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது நிகழ்வில் கலந்துகொண்டு அம்பிகா சற்குணநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு முன்வைத்த கருத்துப் பதிவும் இங்கே வழங்கப்படுகிறது.




