எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கிரான் பிரதேச செயலகத்தினால் கிரான் முதல் புலிபாய்ந்தகல் வரையிலான படகு சேவை இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கன மழையினால் பாலம் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் அறுவடைக்கு தயாரான வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


