எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (18) மேற்கொண்டார்.
காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பெய்து வரும் நிலையில் அனர்த்த முன் ஆயத்தம், அனர்த்த முற்தடுப்பு நடவடிக்கைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் தித்வா புயலின் போது அனர்த்த பாதிப்பு பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிவாரண சேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் உத்தியோகத்தர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத், மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் தித்வா புயலினால் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 844 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


