எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான 2026 ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று (17) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான திருமதி எஸ்.எப்.ஆர். பரீட். கருத்திட்ட முகாமையாளர் திருமதி சுபந்தினி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் றதீஸ் காந்தி உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தாதியர் உதவியாளர் பயிற்சி, இளைஞர்களுக்கான கனரக வாகன பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல்கள், அழகு படுத்தும் கலைஞர் பயிற்சிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மொழிப் பயிற்சிகள், சிறு வியாபார நிலைய பதிவு பயிற்சிகள், கடன் திட்டங்கள், NVQ சான்றிதல் வழங்கள் தொடர்பாக கருத்திட்ட முகாமையாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
வருடாந்தம் சமுர்த்தி திணைக்களத்தினால் மே மாதம் நடைபெறுகின புகைத்தல் எதிர்ப்பு கொடி தினம் மூலம் சேகரிக்கப்படும் பணம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதாக வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் 118 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களில் 3660 அங்கத்தவர்களில் இருந்து 21 நபர்கள் பிரதேச மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு (RCBO) உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


