ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண 2026 தொடரில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்குப் பதிலாக, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைப்படி, ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரை அணியில் சேர்க்க வேண்டுமானால், அந்தத் தொடருக்கான நிகழ்வு தொழில்நுட்பக் குழுவின் (Event Technical Committee) அனுமதி பெறுவது அவசியமாகும்.
அவுஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, அக்குழு தற்போது ஸ்மித்தின் வருகையை உறுதி செய்துள்ளது.


