நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலை அறிவிப்பு!

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலைகளை அந்தச் சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் நாடு நெல்லுக்கான குறைந்தபட்ச விலையாக 120 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.