எமது கட்சி நாடாளுமன்ற குழுத்தலைவரின் தெரிவு தவறு!

( வி.ரி.சகாதேவராஜா)

எமது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவரின் தெரிவு தவறு. எமது கட்சியின் எட்டு பேர் கொண்ட நாடாளுமன்ற குழுவிடம் கேளாமல் அரசியல் குழு இந்த தலைவரைத் தெரிவு செய்துள்ளது. இது தவறு.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞான முத்து சிறிநேசன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

எமது கட்சியின் அரசியல் குழு தான் நாடாளுமன்ற குழு தலைவரை தெரிவு செய்திருக்கின்றது தவிர, எமது நாடாளுமன்ற குழுவிடம் இந்த நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு இடம்பெறவில்லை. மாறாக அரசியல் குழு முடிவு எடுத்த பின்னர் அந்த செய்தியை எம்மிடம் ( நாடாளுமன்ற குழு) சொன்னார்கள்.

நாடாளுமன்ற குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் அந்த முடிவை அவர்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. எனவே இது தவறு.

எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போது தான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. வழக்கு வைக்கு வைத்தவர்கள் தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு சொல்ல வேண்டும் .

இலங்கை தமிழரகக் கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது எனவும் கூறினார்.

மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்.
கைதிகளுக்கு விடுதலை அளிக்கப் படவேண்டும்.

மிக விரைவாக இந்த விடயங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே கடந்த கால அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கம் இனவாத அல்லது மதவாத அரசாங்கமாக அல்லாமல் மக்கள் எல்லோரையும் பொதுவாக சமத்துவமாக நோக்கி பணிகளை செய்யக்கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவேறி இருக்கின்றது.

தினம் தினம் யானைகள் தற்போது காட்டுகளில் இருந்து வீடுகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
நேற்று வாழைச்சேனை நகருக்குள் பட்டப்பகலில் வந்துள்ளது. ஒருவர் பலி. மூவர் காயம். பல லட்சம் ரூபாய் சொத்து சேதம்.

அதேவேளை பயிர்களை அழிக்கும் செயற்பாடுகளையும், இந்த காட்டு யானைகள்ஈடுபட்டு வருகின்றன.

அதே போன்று மனித உயிர்க்களையும் யானைகள் அழித்துக் வருகின்றன. எனவே காட்டு யானைகள் விடயத்தில் மிக முக்கியமான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யானைகள் செல்லப்பிராணிகளாக இருக்கின்ற போது மணிதர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்

நீர் நிலையங்களில் முதலை செல்ல பிராணியாக இருக்கின்றது.

மணிதர்கள் இந்த இரண்டு விலங்குகளாலும் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
அரசாங்கம் உரிய தீர்மானம் எடுக்க வேண்டும் .

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு விலங்கு அதிகப்படியாக இருந்தால் அதனை சமநிலையை ஏற்படுத்துவதற்காக விலங்குகளை கொல்வது ஒரு வழிமுறை .

ஆனால் இலங்கையில் பிராணிகள் மீது மிகவும் அன்பு செலுத்துகின்றார்கள்.

அதுவே பல மனிதர்களை அடித்துக் கொன்றாலும் கூட அவ்வாறு அடித்துக் கொல்கின்ற பிராணிகளையும் அவர்கள் செல்லமாகவே தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அது மக்களை கொல்கின்ற போதும் அது பற்றி அவர்கள் சிந்திக்கின்ற அளவு மிக குறைவாக இருக்கின்றது.
மனிதனை அல்லது சொத்துக்களை யானை துவமாசம் செய்யுமாக இருந்தால் அதனை யானை மனிதன் முரண்பாடு என அழகாகச் சொல்கின்றார்கள்.

ஆகவே இந்த விடயத்தில் தீர்க்கமானதோடு முடிவை எடுத்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்.

இனிவரும் வருடங்களிலாவது தேசிய இனப் பிரச்சினையை தீர்த்து நுங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற போது தமிழ் மக்கள் அன்றைய தினத்தை கரி நாளாக அனுசரிக்கின்ற அந்த சந்தர்ப்பத்தை வழங்காது விடுங்கள்.

அதே சமயம், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்களுக்கு உரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதே போன்று தான் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இவற்றை யும் விட மாகாண சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது நடத்தப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்படுவதற்குஉரிய வாய்ப்புகளை ஏற்படுத்தினால் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மாறாக, தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாத சூழலில் காணாமல் ஆக்கப்படாடொருக்குரிய தீர்வு காணப்படாத நிலையில், நாங்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மனரீதியாக நாங்கள் தயார் இல்லை.
என்றார்.