எதிர்க் கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தி!

அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு முடிந்தமை பெரும் மகிழ்ச்சியாகும்.

மகா சிவராத்திரி என்பது இருளுக்கு மத்தியில் ஞான ஒளியைத் தேடிச் செல்லும் ஆன்மீகப் பயணமாகும். அது பூஜை, பக்தி மற்றும் தியானத்தின் மூலம் மனதை சுத்தப்படுத்தி, அநீதி, அவிசுவாசம் மற்றும் அகங்காரம் என்பவற்றை களைய வழியைக் காட்டும் உன்னத இரவாகக் கருதப்படுகிறது. சிவபெருமானை வணங்கினால் மோட்சம் உதயமாகும். ஆகையால், மகா சிவராத்திரி தினம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது பின்வாங்காமல், ஆத்ம விசுவாசத்துடன் புதிய தொடக்கத்திற்காக எழுந்திருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மகா சிவராத்திரி நாள் உண்மை, நீதி நியாயம் மற்றும் கருணை ஆகிய மதிப்புகள் நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அநீதிக்கு எதிராக உண்மை வெல்லும், அவிசுவாசத்தை விட ஒற்றுமை வலிமையானது, இருளை விட ஒளி வலுவானது என்பதை இந்த உன்னத நாள் நமக்கு உணர்த்துகிறது.

நமது நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், மகா சிவராத்திரி தினம் நமக்கு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்து தருகின்றன. இருளை நீக்கி ஒளியைப் பிரகாசிக்கச் செய்வது போல, நாமும் நாடாக முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் நம்மத்தியிலான சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும் என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே, இன்று சிவராத்திரி நாளை கொண்டாடும் வேளையில், நம் இதயங்களில் பிரகாசிக்கும் ஒளிக்கீற்று நாடு முழுவதும் பரவி, அமைதியும், ஒற்றுமையும், செழிப்பும் நிறைந்த இலங்கையை உருவாக்குவதற்கு வழிவகுக்கட்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை பாராளுமன்றம்