( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப் படவுள்ளன.
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
விழிப்புலனற்றவர்கள் குறிப்பாக பாடசாலையில் தற்போது பயில்வோர் மற்றும் பாடசாலை விட்டு நீங்கியோர் இரு சாராரும் கலந்து கொள்ளலாம்.
அவர்களிடமிருந்து சிறு கட்டுரை சமூகம், மனிதநேயம் கல்வி சார்ந்தவை ,அனுபவ கட்டுரை ,வாழ்க்கை அனுபவங்கள், சவால்களை பிரதிபலிப்பவை ,ஊக்க கட்டுரை, தன்னம்பிக்கை முயற்சி ,வாழ்வின் வெளிச்சத்தை நோக்கியவை ,சமூக விழிப்புணர்வு கட்டுரை, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வு, ஆன்மீக சிந்தனை கட்டுரை, உள்ளார்ந்த அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளவை, குறுங்கதை ,சமத்துவம் மனித உரிமைகள் சார்ந்த புதுக்கவிதைகள் மற்றும் சுதந்திர கவிதைகள் குறுஞ்சி சிந்தனைகள் ஒரு சம்பவம் அல்லது கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்படும் சுருக்கமான ஆழமான சிந்தனை எழுத்துக்கள்
என்பன வரவேற்கப் படுகின்றன.
முடிவுத்தேதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி 2026 ஆகும்.
முக்கிய விதிமுறைகள் அனைத்து ஆக்கங்களும் பிரேயில் மற்றும் சாதாரண எழுத்து வடிவிலும் அமைந்திருக்க வேண்டும்.
ஆக்கங்கள் முடிவு தேதிக்கு முன்பாக ஏப்ரல் ஒன்று 2026க்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு நபரால் ஒரு ஆக்கம் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். ஆக்கங்கள் அனைத்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைந்திருக்க வேண்டும். மற்றும் ஒரே மாதிரியான மற்றும் அதிக நீளமான ஆக்கங்கள் புத்தகத்தில் சேர்க்கப்பட மாட்டாது.
ஆக்கங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம். தபால் மூலம் அனுப்பும் போது கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆக்கங்களை சமர்ப்பிக்கும் போது கீழ்க்கண்ட விபரங்கள் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
1. மாணவரின் அல்லது பங்கேற்பாளரின் முழு பெயர்
2 கல்வி கற்கும் ஆண்டு அல்லது வகுப்பு பாடசாலை மாணவர்களுக்கு 3.பாடசாலை அல்லது கல்வி நிறுவனம் பணி புரியும் இடம்
4 .முழு முகவரி
5 .தொலைபேசி இலக்கம்
6 .மின்னஞ்சல் முகவரி:
சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் பங்கேற்பாளர்களால் சுயமாக உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கங்கள் இறுதி கட்டத்தில் மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறந்த மூன்று ஆக்கங்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்.
பரிசில் பெறும் பங்கேற்பாளர்களுக்கு நூல் வெளியீட்டு நிகழ்வின் போது பரிசுகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் சிறந்த ஆக்கங்கள் ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் “ரைட்டிங் தி லைட்” நூலில் சேர்க்கப்பட்டு வெளியிடப்படும்.
தொடர்புகளுக்கு முகவரி: விழிப்புலனற்றோருக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வளங்கள் மற்றும் பயிற்சி மையம், ராமகிருஷ்ண மிஷன், ராமகிருஷ்ண புரம், மட்டக்களப்பு .
மின்னஞ்சல் irdcrkm@ gmail.com


