ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..! இன்று காலை 11.02.2026 இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் நானும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M A சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டோம்.

இந்தச் சந்திப்பின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நீக்குதல் மற்றும் அதற்கான புதிய சட்ட வரைவு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சம உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது.